/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மர்ம நபர்கள் நடமாட்டத்தால் சோதனை சாவடி அவசியம்
/
மர்ம நபர்கள் நடமாட்டத்தால் சோதனை சாவடி அவசியம்
ADDED : நவ 28, 2025 01:57 AM
பள்ளிப்பாளையம், கீழ்காலனி பகுதியில், வாகன சோதனை சாவடி மையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் நான்கு பிரிவு சாலை செல்கிறது. இதனால் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். இப்பகுதியில், இரவு நேரத்தில் வெளி பகுதியிலிருந்து பலர் மது அருந்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கும்பலாக பலர் சுற்றி வருகின்றனர். குடிமகன்கள், மர்மநபர்கள் நடமாட்டம் இரவு நேரத்தில் இங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் இரவு நேரத்தில் பெண்கள் இந்த வழியாக செல்லவே
அச்சமடைகின்றனர். பல சமயத்தில் வழிப்பறியும் நடந்துள்ளது. இங்கு குடியிருப்பு அதிகளவு உள்ளதால், பொதுமக்கள் எந்நேரமும் வந்து செல்கின்றனர். குடிமகன்களின் வருகையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இங்கு வாகன சோதனை சாவடி அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

