/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் வேதனை
/
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் வேதனை
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் வேதனை
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் வேதனை
ADDED : ஜூலை 27, 2025 01:36 AM
நாமக்கல், ''இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது,'' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் வேதனை தெரிவித்தார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படியும், சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும், நாமக்கல் மாவட்ட நீதித்துறை சார்பில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், சமத்துவம், அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசியதாவது:
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின், 2022ம் ஆண்டு அறிக்கைப்படி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 4.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2023 கணக்கெடுப்புப்படி, 32.8 சதவீதமாக உள்ளது. இது உலக சராசரியான, 50 சதவீதத்தைவிட குறைவாக உள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப பட்டதாரிகளில் பெண்கள் இப்போது, 43 சதவீதமாக உள்ளனர். இது உலக அளவில் மிக உயர்ந்த ஒன்றாகும். உலக அளவில் தொழில் முனைவோர், மாஸ்டர்கார்டு குறியீட்டின் படி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், லட்சக்கணக்கான பெண்கள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் தலைமை பொறுப்பு வகிக்க முடிந்தது. அதிகாரம் பெற்ற பெண்கள், சமூகங்களை மேம்படுத்து
கிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
பெண்கள் சமத்துவமாக நடத்தப்படும்போது, ஜனநாயகமும் நியாயமான பாதையில் செல்ல முடியும். ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு சமுதாயமே கல்வி பெறும் என்பது நம் முன்னோர் வாக்கு. நம் சட்டங்களும், நீதிமன்றங்களும், நம் கூட்டு மனசாட்சியும் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி சண்முகப்பிரியா, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, எஸ்.பி., விமலா, மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட
நீதிபதிகள் உள்பட பலர்
பங்கேற்றனர்.