/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு
/
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு
ADDED : ஜன 07, 2024 11:32 AM
நாமக்கல்: 'சென்னையில் இன்று நடக்கும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் சென்னையில், 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024' (ஜி.ஐ.எம்.,) நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின், மாநாட்டிற்கு தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். தொழில்துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் மாணவர்களை பங்குபெற செய்வது அரசின் நோக்கம். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, சென்னையில், இன்று காலை, 9:30 முதல், 11:45 மணி வரை நடக்கிறது.
நாமக்கல் மாவட்ட தொழில்துறை கூட்டமைப்புகள், தொழில்துறை தலைவர்கள், எம்.எஸ்.எம்.இ., சிட்கோ மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் முனைவோர் பங்குபெறும் வகையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லுாரி, டிரினிட்டி சி.பி.எஸ்.இ., பள்ளி, நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள், பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் காணும் வகையில், www.tngim.2024.com என்ற இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.