/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு
/
சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு
ADDED : ஆக 23, 2025 01:33 AM
நாமக்கல், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வார வானிலையை பொறுத்தவரை, பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 96.8, 77 டிகிரி பாரன்ஹீட்டாக காணப்பட்டது.
மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம், 96.8 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம், 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று, தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு, 16 கி.மீ., வேகத்தில் வீசும்.
கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் சுவாசக்குழல் பாதிப்பாலும், வெப்ப அயற்சியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, பண்ணையாளர்கள், கோழிகளுக்கு தகுந்த நோய் தடுப்பு முறைகளையும், குடிநீரில் நுண்ணுாட்ட மருந்துகளையும், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.