/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
மோகனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
மோகனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
மோகனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
மோகனுார்: மோகனுார் அடுத்த நெய்க்காரன்பட்டியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது.
எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மின்வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, போலீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட, 14 துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்கள் மீது விசாரனை மேற்கொண்டனர்.மக்களிடம் பெறப்பட்ட, 804 மனுக்களில், தகுதியுள்ள, 32 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு காணப்படும் என, எம்.எல்.ஏ., ராமலிங்கம் கூறினார். ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, ஒன்றிய பொறுப்பாளர் மூர்த்தி, பொறுப்பு அலுவலர் புகழேந்தி, தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ., கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.