ADDED : பிப் 15, 2026 04:49 AM
மோகனுார்: கரூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 29; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மலர்கொடி, 28. தம்பதிக்கு தன்சிகாஸ்ரீ, 6, ஜசிகா, 3, என, 2 பெண் குழந்தைகள். மோகனுார், வளையப்-பட்டி பவுண்டுபட்டி தெருவில் உள்ள வீட்டிற்கு, 15 நாட்களுக்கு முன் குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, பக்கத்து வீட்டில் குழந்தை ஜசிகா விளையாடிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குழந்தை அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால், குழந்தையை காணவில்லை என தேடியுள்ளனர்.அப்போது, அருகில் உள்ள வீட்டு சுற்றுச்சுவருக்குள் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் குழந்தை விழுந்தது தெரியவந்-தது. குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். 3 வயது குழந்தை, தொட்-டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்-ளது.
