ADDED : செப் 19, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:நாமக்கல் அடுத்த துாசூர் கணவாய்பட்டியை சேர்ந்த தம்பதி தங்கதுரை - சோனியா. இவர்களுக்கு, 5, வயதில் மகனும், ஒன்றரை வயதில் தனியாஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.
சோனியா, தன் குழந்தைகளுடன், நாமக்கல் முல்லை நகரில் உள்ள அக்கா சுமதி வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு, நேற்று மாலை, 4:00 மணிக்கு மின்சாரம் தடைபட்டது.
வீட்டிற்குள் விளையாடி கொண்டிருந்த குழந்தை தனியாஸ்ரீ, யு.பி.எஸ்., இணைப்புள்ள சுவிட்ச் பாக்ஸை தொட்டவுடன், மின்சாரம் பாய்ந்து வலது கை இழுத்துக் கொண்டது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த தாய் சோனியா உள்ளிட்டோர், குழந்தையை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.