தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மிளகாய் வற்றல் யாகம்

மிளகாய் வற்றல் யாகம்

மிளகாய் வற்றல் யாகம்


ADDED : ஏப் 02, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்,பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார் தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது. யாக குண்டத்தில் மிளகாய்களை பக்தர்களே நேரடியாக வேண்டுதலுக்காக செலுத்தினர்.

தொடர்ந்து, பரிவார தெய்வங்களான விநாயகர், முருகர், எமதர்மராஜன், காமாட்சிஅம்மன், துாண்டிமுத்து, ஊஞ்சலாடியார், கன்னிமார்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us