/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
/
பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
ADDED : ஏப் 13, 2025 04:07 AM
ப.வேலுார்: பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார் தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்-தர்கள் கொண்டுவந்து மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது.
யாக குண்டத்தில் மிளகாய்களை பக்தர்களே நேரடியாக வேண்டு-தலுக்காக செலுத்தும் போது சிறு நெடி கூட வருவதில்லை என்-பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு பிரத்தி-யங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ப.வேலுார் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்-டனர்.

