/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
/
பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
ADDED : ஜூலை 11, 2025 01:57 AM
ப.வேலுார், பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார் தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில் பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது.
நேற்று மாலை 6:00 மணிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
7:00 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில், பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், முருகர், எமதர்மராஜன், காமாட்சி அம்மன், துாண்டிமுத்து, ஊஞ்சலாடியார், கன்னிமார்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பிரித்யங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை பலர் கலந்து கொண்டனர்.

