/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இருளப்பசாமி கோவிலில்சித்திரை பொங்கல் விழா
/
இருளப்பசாமி கோவிலில்சித்திரை பொங்கல் விழா
ADDED : ஏப் 17, 2025 02:10 AM
வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் இருளப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத பொங்கல் விழாவை முன்னிட்டு, இருளப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பின் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்த, ஆடு, கோழி பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. மரப்பறை, வெண்ணந்துார், தாரமங்கலம், சேலம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.