/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறந்த உறவினர்கள் மோட்சம் அடைய கிறிஸ்தவர்கள் கல்லறையில் பிரார்த்தனை
/
இறந்த உறவினர்கள் மோட்சம் அடைய கிறிஸ்தவர்கள் கல்லறையில் பிரார்த்தனை
இறந்த உறவினர்கள் மோட்சம் அடைய கிறிஸ்தவர்கள் கல்லறையில் பிரார்த்தனை
இறந்த உறவினர்கள் மோட்சம் அடைய கிறிஸ்தவர்கள் கல்லறையில் பிரார்த்தனை
ADDED : நவ 03, 2024 02:30 AM
நாமக்கல்: கல்லறை திருநாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள கிறிஸ்த-வர்கள், இறந்துபோன தங்களது உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும், நவ., 2ல் இறந்துபோன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில், 'கல்லறை' திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, சுண்ணாம்பு தெளித்து சீர-மைக்கப்படும். தொடர்ந்து, தங்கள் உறவினர்கள் மற்றும் முன்-னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கின்றனர். அதையடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இறந்த ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபடுவர். இவ்விழா, ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.அதன்படி, நாமக்கல் அடுத்து மோகனுார் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள், காட்டுப்புத்துார் சாலையில் உள்ள புனித செல்வ-நாயகியம்மாள் ஆலய வளாக கல்லறையில், ஏராளமான கிறிஸ்த-வர்கள், இறந்த தங்களது உறவினர்களின் கல்லறைக்கு சென்று வழிபட்டனர்.
அதேபோல், ஆர்.சி.,பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்-களும், இறந்தவர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
முன்னதாக, பங்குத்தந்தை ஜான்போஸ்கோ பால் தலை-மையில், காலை, 7:30 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறைகளில், கிறிஸ்த-வர்கள் 'இறந்துபோன தங்கள் உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும்' என, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.