ADDED : செப் 22, 2026 04:16 AM
நாமக்கல்; தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், காலநிலை கல்வி முன்னெடுப்பு உண்டு உறைவிட பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் இடையே, காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்ப-யிற்சி நடத்தப்படுகிறது. காலநிலை மாற்றம், சுற்றுச்
சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து, ஆசிரியர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், பயிற்சி வடிவமைக்கப்-பட்டுள்ளது.
காலநிலை நெருக்கடி மற்றும் அதன் தாக்-கங்கள், புவி அமைப்பு, பல்லுயிர் தன்மை, கால-நிலை நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள், மனித அமைப்பு மற்றும் பொறுப்பு உள்ளிட்ட தலைப்பு-களில் அமர்வுகள் மற்றும் சிறு குழு கலந்துரை-யாடல்கள் நடந்தன. இப்பயிற்சி முகாம், நாளை வரை நடக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் கால-நிலை மாற்றத்துறை சார்பில், சிவசங்கரி, தமிழ்-நாடு கால நிலை மாற்ற துறை சார்பில் கார்முகில் ஏஞ்சலின் காவியா ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் (பொ) அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ், முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட கல்வி அலுவ-லர்கள் புருசோத்தமன், பச்சமுத்து, சாந்தி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு-ஞானம் உள்பட பலர் பங்கேற்றனர்.
