/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம்: 30 நாளில் மனுக்களுக்கு தீர்வு
/
'மக்களுடன் முதல்வர்' முகாம்: 30 நாளில் மனுக்களுக்கு தீர்வு
'மக்களுடன் முதல்வர்' முகாம்: 30 நாளில் மனுக்களுக்கு தீர்வு
'மக்களுடன் முதல்வர்' முகாம்: 30 நாளில் மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஆக 28, 2024 08:35 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கணபதிபாளையம் பகுதியில் உள்ள மண்டபத்தில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து. கலெக்டர் உமா தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், 64 முகாம்களில், 300 பஞ்., பகுதியை சேர்ந்த, 50,833 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று, 5 இடங்களில், 22 பஞ்., பகுதிகள் பயன்பெறும் வகையில் முகாம் நடந்தது. பொதுமக்கள் வழங்கும் மனுக்களை, இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்டு உடனடியாக பதிவு ரசீது வழங்கப்பட்டுள்ளது. தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்பட உள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, நான்கு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, விவசாயிக்கு மக்காச்சோளம் விதைகள் அடங்கிய தொகுப்பு, ஏழு நபர்களுக்கு நத்தம் பட்டா, இரண்டு பேருக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.