தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ADDED : அக் 31, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், கடந்த, 23ல், அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று, தமிழகம் முழுவதும், ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர், 29 பேர், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில், மூன்றாண்டு பணி முடித்த சார்நிலை பணியாளர்களுக்கு, அந்தந்த மண்டலத்தில் கலந்தாய்வு முறையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். மதுரை மண்டலத்தில், நிரந்தர இணைப்பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும்.

கடந்த, 23ல், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு சார்பதிவாளர் லோகநாயகி பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டுறவுத்துறை அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us