sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

/

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஆக 01, 2024 01:52 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்க-ளுக்கு செல்ல, ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரு-வதால், காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று மேட்டூர் அணையில் இருந்து, 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், காவிரியாற்றில் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோரம் உள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையம், குரும்பல மகாதேவி, அர-சம்பாளையம், ஜேடர்பாளையம் அணைக்கட்டு, ஜேடர்பா-ளையம் பரிசல் துறை, கண்டிப்பாளையம் பரிசல் துறை, வடக-ரையாத்துார், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்ட-மங்கலம், பொத்தனுார், ப.வேலுார், நன்செய் இடையாறு, பாலப்-பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொதுமக்கள், காவிரியாறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூ-டாது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால நடவடிக்கை மையம், 1077, காவல்துறை, 100, தீயணைப்-புத்துறை, 101, மருத்துவ உதவி, 104, ஆம்புலன்ஸ் உதவி, 108 ஆகியவற்றிற்கும், பரமத்தி வேலுார் வட்டத்துக்கு, 9445000546 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us