/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம்
/
வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : டிச 20, 2024 01:01 AM
ப.வேலுார், டிச. 20--
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. சந்தைக்கு ப.வேலுார், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு, 4,725 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 141.10 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக,126.09 ரூபாய்க்கும், சராசரியாக,140.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம்,
5 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த சந்தைக்கு, 4,144 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 142.69 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 127.89 ரூபாய்க்கும், சராசரியாக, 139.66 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 5 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.