/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்
/
தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்
தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்
தேங்காய் பருப்பு ஏலம் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : செப் 12, 2025 01:38 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.
தேசிய வேளாண்மை சந்தைக்கு ப.வேலுார், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை, தேசிய வேளாண்மை சந்தை ஏலத்திற்கு வியாபாரிகள் வராததால், ஏலம் நடைபெறவில்லை.
நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தை ஏலத்திற்கு, 14,185 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 232.69 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 222.22 ரூபாய்க்கும், சராசரியாக, 231.89 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 31 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு
வர்த்தகம் நடந்தது.

