/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேங்காய் சுடும் பண்டிகைக்கு அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்
/
தேங்காய் சுடும் பண்டிகைக்கு அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்
தேங்காய் சுடும் பண்டிகைக்கு அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்
தேங்காய் சுடும் பண்டிகைக்கு அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்
ADDED : ஜூலை 17, 2025 02:26 AM
நாமக்கல், ஆடி, 1ஐ தேங்காய் சுடும் பண்டிகையாக, சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.
இதற்காக பதமான இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒரு கண்ணில் மஞ்சள் பூசிய அழிஞ்சி குச்சியை சொருகி, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தேங்காயை தீயில் வாட்டி சுடுவர்.
இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபடுவர். பின், அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து பண்டிகையை கொண்டாடுவர்.
அதன்படி, இன்று ஆடி மாதம் பிறப்பையொட்டி, நேற்று நாமக்கல் நகரில் கோட்டை சாலை, உழவர் சந்தை, தினசரி சந்தை, பூங்கா சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சாலையோர கடைகளில் தேங்காய் மற்றும் அழிஞ்சி
குச்சிகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, மெட்டாலா உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த அழிஞ்சி குச்சிகள், 15 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.