/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : ஜூலை 16, 2025 01:26 AM
ப.வேலுார், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது.
இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் அதிகபட்சம் கிலோ, 69.99 ரூபாய், குறைந்தபட்சம், 52.10 ரூபாய், சராசரி, 68.19 ரூபாய் என, 11.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 71.71 ரூபாய், குறைந்தபட்சம், 54.49 ரூபாய், சராசரி, 67.67 ரூபாய் என, 53,103 தேங்காய்கள், 12.39 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தேங்காய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

