/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.3.07 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.3.07 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஜூன் 14, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வெள்ளி தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில், முதல் தரம் கிலோ, 190.65 ரூபாய் முதல், 206.65 ரூபாய்; இரண்டாம் தரம், 166 ரூபாய் முதல், 186 ரூபாய் என, 35 மூட்டை தேங்காய் பருப்பு, 2.31 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், முதல் தரம் கிலோ, 196.10 ரூபாய் முதல், 227.75 ரூபாய்; இரண்டாம் தரம், 186 ரூபாய் முதல், 190.10 ரூபாய் என, 40 மூட்டை தேங்காய் பருப்பு, 3.07 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 20 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.