/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி, சேந்தையில் கலெக்டர் ஆய்வு
/
எருமப்பட்டி, சேந்தையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
சேந்தமங்கலம்: எருமப்பட்டி யூனியன், போடிநாயக்கன்பட்டி பஞ், கிராம ஊராட்சி சேவை மையத்தில் வேளாண்மை துறை சார்பில், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சி நடைபெற்றது.இதில் பங்கேற்ற கலெக்டர் உமா, விவசாயிகளுக்கான வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சேந்தமங்கலம் யூனியனில், கல்குறிச்சி பஞ்., குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின் பொட்டி-ரெட்டிபட்டி, புதுக்கோட்டையில் சாலை அமைக்கப்பட்டுள்-ளதை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்-கொண்டார்.இதை தொடர்ந்து, போடிநாயக்கன்பட்டி துணை சுகாதார நிலை-யத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்து பொருட்களின் இருப்பு, மருத்துவர்கள், நோயாளிகளின் வருகை விபரம், சுகாதார நிலை-யத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளுக்-கான படுக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.