ADDED : ஆக 21, 2026 05:35 AM
நாமக்கல்:ராசிபுரம்
அடுத்த புதுசத்திரம் களங்காணி கிராமம் வழியாக, சேலம்--கரூர் அகல
ரயில்பாதை செல்கிறது. இந்த தண்டவாளத்தை மக்கள் கடந்து செல்லும்
வகையில், குறிப்பிட்ட இடத்தில் மண் கொட்டி பாதை வசதி செய்துள்ளனர்.
இந்த
பாதையை அடைக்க ரயில்வே நிர்வாகம் கற்கள் கொட்டியுள்ளது. இதை
கண்டித்தும் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் நேற்று நாமக்கல்
கலெக்டர் அலுவலகம் வந்த, களங்காணி கிராம மக்கள் முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை
நடத்தினர். அப்போது, 'மண்பாதை அடைக்கப்பட்டால் ரயில் பாதையை கடக்க
எங்களுக்கு வேறு பாதை வசதியில்லை. இந்த பாதையை கடந்து தான்
புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறோம்.
எனவே, மண் பாதையை அடைக்கக் கூடாது. அல்லது கடந்து செல்லும் வகையில்
ரயில்வே கேட் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
அவர்களை சமரசம்
செய்த போலீசார், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.
