/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண் அள்ளுபவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
மண் அள்ளுபவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2024 07:01 AM
ராசிபுரம்: தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, ஓடைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் வண்டல் மண், களிமண்ணை அள்ளிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 116 ஏரி, குட்டைகளில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக பலர் ஆன்லைனில் விண்ணப்பித்து தாசில்தார் மூலம் அனுமதி பெற்று வருகின்றனர். பல இடங்களில் வண்டல் மண்ணை அள்ளிச்சென்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில், 10 அடிக்கு மேல் வெட்டி கிராவல் மண்ணை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.ராசிபுரத்தில் கடந்த வாரம் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இதையடுத்து கலெக்டர் உமா, 'வண்டல் மண்ணை அனுமதித்த இடத்தை தவிர மற்ற இடங்களில் கொட்டினால் அனுமதி ரத்து செய்வதுடன் அபராதம் விதித்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கை விபரத்தை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள கிராமங்களில் வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஒட்டியுள்ளனர். அதேபோல், மண் எடுக்கும் இடங்களுக்கே சென்று வி.ஏ.ஓ, உதவியாளர்கள் கலெக்டர் எச்சரிக்கை குறித்து விளக்கி வருகின்றனர்.

