/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிலம் அளவீடு பணி துவக்கம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிலம் அளவீடு பணி துவக்கம்
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிலம் அளவீடு பணி துவக்கம்
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிலம் அளவீடு பணி துவக்கம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையேற்று, புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அனுமதி அளித்து, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்காக, பரமத்தி வேலுார் ரோட்டில் உள்ள மண்கரட்டு மேடு என்ற பகுதியில் நக-ராட்சிக்கு சொந்தமான, 19 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், பஸ்கள் வந்து சொல்ல ஏதுவாக வழிகளை தேர்வு செய்-யவும், ஐந்து தனியார் இடங்களில் இருந்து இடத்தை பெற்று புதிய பஸ் ஸ்டாண்டை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட நில அளவை-யாளர் சித்ரா, தாசில்தார் விஜயகாந்த், நகராட்சி பொறியாளர் சர-வணன், சர்வேயர் பூபதி, நகர அமைப்பு அலுவலர் ஸ்ரீதர், நகர-மைப்பு ஆய்வாளர் செல்வம், மண்டகபாளையம் வி.ஏ.ஓ., விமலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.