/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
/
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
ADDED : நவ 03, 2024 01:20 AM
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு
திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
நாமக்கல், நவ. 3-
'காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்' என, எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நமக்கல், சேலம், திருச்சி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களிடம், காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கி வரும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இத்திட்டம் முழுமையான வெற்றி பெற, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள சமூக தன்னார்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க, கொ.ம.தே.க., முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை, 132 கி.மீ., துாரம் இந்த திட்டத்தினால் பயன்பெற உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 50,000 ஏக்கர் வரை பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதற்கான முதல் முயற்சியாக, 'காவிரி - திருமணிமுத்தாறு மீட்பு திட்டம்' என்ற குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், 8111001999 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.