/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையின்றி மக்கள் அவதி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
/
சாலையின்றி மக்கள் அவதி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
ADDED : நவ 28, 2025 01:30 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை வெள்ளக்கல்பட்டி அம்பேத்கர் நகரில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சபாபதி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர், நேற்று டவுன் பஞ்சாயத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
தொடர் மழையால் அம்பேத்கர் நகர் சேறும் சகதியுமாக மாறி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் தோல் நோய்களும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே கான்கிரீட் சாலை அமைக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், மூன்று முறைக்கு மேல் முயற்சி செய்தது.
அதை சிலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே, கான்கிரீட் சாலை அமைக்க இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் நகருக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

