/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் முடியும்'
/
'கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் முடியும்'
'கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் முடியும்'
'கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் முடியும்'
ADDED : ஜன 27, 2025 03:15 AM
ராசிபுரம்: குடியரசு தினத்தையொட்டி, ராசிபுரம் யூனியன், சிங்களாந்தபுரம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
சிங்களாந்தபுரத்தில், 7,643 பேர் உள்ளனர். இந்த கிராமத்தில் மின்விளக்கு, சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், 845 கோடி ரூபாயில், ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அடுத்த பொங்கலுக்குள் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

