/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேர்வுநிலை தர ஊதியத்தை மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்துள்ளதாக புகார்
/
தேர்வுநிலை தர ஊதியத்தை மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்துள்ளதாக புகார்
தேர்வுநிலை தர ஊதியத்தை மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்துள்ளதாக புகார்
தேர்வுநிலை தர ஊதியத்தை மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்துள்ளதாக புகார்
ADDED : அக் 23, 2025 01:25 AM
நாமக்கல், தேர்வுநிலை தர ஊதியத்தை வட்டார கல்வி அலுவலர்கள் தாங்களாகவே மட்டுப்படுத்தி, ஊதிய குறைப்பு செய்துள்ளதாக, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் மனு அளித்துள்ளனர்.
அதில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பணி நிறைவு பெற்றுள்ள தகுதியுடைய தலைமை ஆசிரியர்களுக்கு அரசு விதிப்படி, 2009 மே, 31 வரை பணிக்காலத்திற்கு தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தர ஊதிய குறைப்பு மீது பல்வேறு மாவட்டத்தின் தலைமையாசிரியர்கள் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பல்வேறு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. இவை மட்டுமின்றி கோரிக்கை சார்ந்து அரசுத்-துறையுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், அவசரமாக மாவட்டத்தின் பல்வேறு வட்டார கல்வி அலுவலர்கள் தாங்கள் அனுமதித்துள்ள தேர்வுநிலை தர ஊதியத்தை தாங்களாகவே மட்டுப்படுத்தி ஊதியக்குறைப்பு செய்கின்றனர். மேலும், மிகை ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்துமாறும் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கின்றனர். மாநிலத்தில் எங்கும் இல்லாத அளவில் தவறான செயல்பாடுகளை இம்மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
மாநில பொருளாளர் முருகசெல்வராசன், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தேவகி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.