/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துக்கல்லூரி இட மாற்றத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்
/
அரசு மருத்துக்கல்லூரி இட மாற்றத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்
அரசு மருத்துக்கல்லூரி இட மாற்றத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்
அரசு மருத்துக்கல்லூரி இட மாற்றத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்
ADDED : நவ 01, 2024 01:48 AM
நாமக்கல், நவ. 1-
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி இடம் மாற்றத்தால், போதிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மோகனூர் சாலையில் பழமை வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனை இருந்தது. இந்மருத்துவமனைக்கு சுகாதார நிறுவனம் தேசிய தரச்சான்று வழங்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் தரமாக இருந்ததால் பவித்திம், காரவள்ளி, காளப்பநாய்க்கன்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டம், தொட்டியம், மேய்க்கல்நாய்க்கன்பட்டி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சென்றனர்.
மருத்துவமனையை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கேயே செயல்பட்டு வந்தது. மருத்துவமனை நகரில் மத்தியில் இருந்ததால், திருச்சி சாலை, சேந்தமங்கலம் சாலை,மோகனூர் சாலை,துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை எளிதாகவும், காலவிரயமின்றியும் கிடைக்கும் வகையில் இருந்தது. இதனால் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகபின்புறம், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருச்சி,துறையூர்,சேந்தமங்கலம்,மோகனூர் ஆகிய சாலைகளில் இருந்து தீவிர சிகிச்சைக்காக அழைத்து வரும் நோயாளிகள் நாமக்கல் நகரை தாண்டி செல்வதற்குள் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மருத்துவமனை மோகனூர் சாலையில் இருந்த போது நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மருத்துவமனைக்கு எளிதில் நோயாளிகளை அவசரகால ஆம்புலென்ஸில் கொண்டு செல்ல முடிந்தது. தற்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரை தாண்டுவதற்குள் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், மோகனூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மீண்டும் துவக்கினால் உயிரிழப்புகளை தவிக்கலாம்.
இவ்வாறு கூறினர்.