/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆம்புலன்சுக்கு போன் செய்தால் தனியாருக்கு அனுப்புவதாக புகார்
/
ஆம்புலன்சுக்கு போன் செய்தால் தனியாருக்கு அனுப்புவதாக புகார்
ஆம்புலன்சுக்கு போன் செய்தால் தனியாருக்கு அனுப்புவதாக புகார்
ஆம்புலன்சுக்கு போன் செய்தால் தனியாருக்கு அனுப்புவதாக புகார்
ADDED : செப் 02, 2025 01:16 AM
ராசிபுரம்:இரவு நேரங்களில், 108 அவசர கால ஆம்புலன்சுக்கு போன் செய்தால், தனியார் ஆம்புலன்சுக்கு அனுப்பி விடுவதாக, பா.ஜ., புகாரளித்துள்ளது.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள, 108 அவசர கால ஆம்புலன்சுக்கு போன் செய்தால் டிரைவர்கள் பிரைவேட் ஆம்புலன்சுக்கு தெரிவித்து விடுவதாக தொடர்ந்து புகார் வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, 3:30 மணிக்கு, ராசிபுரம் அருகே, விபத்தில் சிக்கிய நவீன், 108 அவசர கால ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். அதை எடுத்த நர்சுகள், '108 அவசர கால ஆம்புலன்ஸ் வராது என்றும்; தனியார் ஆம்புலன்சை குறிப்பிட்டு போன் செய்யுங்கள்' எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ., மாவட்ட செயலாளர் சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனை எம்.ஓ.,விடம் புகாரளித்தனர்.