ADDED : செப் 02, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:ராகுல்
மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை திரும்பப்பெற வலியுறுத்தி,
நாமக்கல்லில் காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்.,
தலைவர் செந்தில் தலைமை வகித்தார். அதில், சமூக நீதி அடிப்படையிலான
அரசியல் சாசன கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்
ராகுலுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததை கண்டித்தும்,
உத்தரகாண்ட் போலீஸ் மற்றும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும்,
அரசியல் பழிவாங்கலை கைவிடக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
