/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் காங்., ஆலோசனை கூட்டம்
/
ராசிபுரத்தில் காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : மே 02, 2025 02:22 AM
ராசிபுரம்:
மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராசிபுரத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ், அரசியல் அமைப்பை காப்போம் என்ற பெயரில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், இதற்கான செயல் திட்டப் பணிகளை மேற்கொள்ள, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., சார்பில் ராசிபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்., தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், நாமக்கல் நகர காங்., தலைவர் மோகன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, வட்டார தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், சேந்தமங்கலம் ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை கிழக்கு இளங்கோவன், மேற்கு ஷேக் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.