ADDED : மே 09, 2026 04:08 AM
நாமக்கல்:தமிழகத்தில், அதிக சட்டபை தொகுதிகளில் வெற்றிபெற்ற, த.வெ.க., தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரை கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், சுப்ரமணியம், சீனிவாசன், மாநகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற, த.வெ.க., தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத, தமிழக கவர்னர் அர்லேகரை கண்டித்து கோஷம் எழுப்பினர். வட்டார தலைவர்கள் குப்புசாமி, இளங்கோ, சிவாஜி மன்றம் சந்திரசேகர், மகளிர் காங்., ராணி, யூத் காங்., நகர தலைவர் சர்மா, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
