/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காங்., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
/
காங்., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 21, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்., ஓட்டுச்சாவடி
முகவர்கள் கூட்டம்
வெண்ணந்துார், நவ. 21-
வெண்ணந்துார் காங்., சார்பில், நேற்று ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்., கமிட்டி தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் தங்கமுத்து, காசிபெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் பேசுகையில், 'கிராம காங்., கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்; வீடுதோறும் சென்று காங்., கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; அனைத்து ஊராட்சிகளிலும் கொடிக்கம்பம் நட வேண்டும்; பேரூராட்சிகளில் வாக்கு கமிட்டி அமைக்க வேண்டும்,'' என்றார்.