/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தங்கத்துக்கு ஜி.எஸ்.டி.,வரி விலக்கு அளிக்க கோரி காங்கிரஸ் தீர்மானம்

ADDED : ஜூலை 25, 2025 01:01 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், நகர தலைவர் சிங்காரம் தலைமையில் நடந்தது. வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். செல்லியம்மன் மணி வரவேற்றார்.
கூட்டத்தில், நலிவடைந்து வரும் சிறு, குறு தொழிலாளர்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வு நிலை பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாறு காணாத வகையில் தினமும் விலை உயர்ந்து வரும் தங்கத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
கைத்தறி தொழிலை பாதுகாக்க தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைகளுக்கு தலா இரண்டு துண்டுகளை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜன், கோபிநாத், தங்க முத்து, மோகன், ராமலிங்கம், தனபால், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.