ADDED : ஜூலை 12, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் :எருமப்பட்டி பேரூரில், நேற்று முன்தினம், காங்., சார்பில், 'அரசியல் அமைப்பை காப்போம்' என்ற பொதுக்கூட்டம், வட்டார தலைவர் தங்கராசு தலைமையில் நடந்தது. வட்டார தலைவர்கள் ஜெகன்நாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக காங்., ஓபிசி பிரிவு துணைத்தலைவர் செந்தில் பேசுகையில், ''கொல்லிமலைக்கு, 70 கொண்டை ஊசி வளைவுகளை அமைத்து, கொல்லிமலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தந்தவர் காளியண்ணன். அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய குழுவில் இருந்தவர். அதற்கான ஒரு அச்சாரமாக, எருமப்பட்டியில் இந்த பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது,'' என்றார்.