/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புளோ கன்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால் இணைப்பு துண்டிப்பு

ADDED : ஜூலை 30, 2025 01:31 AM
நாமக்கல், தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில், புளோ கன்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என, கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஜேடர்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில், குடிநீர் கட்டுப்பாடு வால்வுகளை (புளோ கன்ட்ரோல் வால்வு) கழற்றி, குடிநீர் பிடித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதில், மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு தும்மங்குறிச்சி பகுதியில், சில வீடுகளில் புளோ கன்ட்ரோல் வால்வு களை கழற்றிவிட்டு, குடிநீர் பிடிப்பது கண்டறியப்பட்டது. இதையொட்டி அத்தகைய வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், புளோ கன்ட்ரோல் வால்வுகளை கழற்றியும், குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்தியும், குடிநீர் உறிஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.