/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.10.58 கோடியில் ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டி கட்டுமான பணி துவக்கம்

ADDED : நவ 25, 2024 03:10 AM
ராசிபுரம்,: ராசிபுரம் நகரின் மையப்பகுதியில், தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. அங்கிருந்து, சேலம், ஈரோடு, கோவை, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்க-ளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ராசிபுரம் நகரின் மையப்பகுதியிலிருந்து, 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புறவழிச்சாலையை ஒட்டி அணைப்பாளையத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்ய நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 7 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டு, 10.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்-கான டெண்டர் பணிகள் முடிந்த நிலையில், நேற்று கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர் மதி-வேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். புதிதாக அமைய உள்ள பஸ் ஸ்டாண்டில், 52 கடைகள், 30 பஸ்கள் நிறுத்த இடம், 2 உணவு விடுதிகள், இருசக்கர, நான்கு சக்கர வாக-னங்கள் நிறுத்துமிடம், நேர காப்பாளர் அறை, காவலர் அறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை என, பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.நகராட்சி கமிஷனர் கணேசன், சேர்மன் கவிதா, நகர செயலாளர் சங்கர், தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.