ADDED : ஜன 08, 2026 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி, 23; சென்டரிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், இடைப்பாடி சாலை, ராஜாஜி குப்பம் எதிரே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் டூவீலர் ஓட்டி சென்றவர் திடீ-ரென பிரேக் போட்டதால், பின் தொடர்ந்து சென்ற சூர்யமூர்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், சூர்யமூர்த்-தியின் தலை மீது மோதி படுகாயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். ஆனால், நேற்று காலை, 6:00 மணிக்கு உயிரி-ழந்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவரான, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த முருகன், 41, என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

