/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரே மொபட்டில் 4 பேர் சென்றபோது டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி பலி
/
ஒரே மொபட்டில் 4 பேர் சென்றபோது டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி பலி
ஒரே மொபட்டில் 4 பேர் சென்றபோது டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி பலி
ஒரே மொபட்டில் 4 பேர் சென்றபோது டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி பலி
ADDED : ஜூன் 04, 2025 01:28 AM
நாமகிரிப்பேட்டை, ஒரே மொபட்டில், நான்கு பேர் சென்றபோது டிராக்டர் மோதிய விபத்தில், கட்டட மேஸ்திரி பலியானார். மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராசிபுரம், காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் மூர்த்தி, 48; கட்டட மேஸ்திரி. இவருடன் வேலை பார்ப்பவர்கள் ராஜேந்திரன், 54, பூபதி, 57, கந்தசாமி, 60, ஆகிய, நான்கு பேரும், நேற்று காலை, 6:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸல்' மொபட்டில், கட்டட பணிக்காக, ராசிபுரத்தில் இருந்து மெட்டாலா நோக்கி புறப்பட்டனர்.
வண்டியை மூர்த்தி ஓட்டினார். யாரும், 'ஹெல்மெட்' அணியவில்லை. நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல் காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மொபட் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வண்டியை ஓட்டிச்சென்ற மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த மற்ற மூவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து
வருகின்றனர்.