/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக் ஆயுக்தா உறுப்பினரான நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி
/
லோக் ஆயுக்தா உறுப்பினரான நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி
லோக் ஆயுக்தா உறுப்பினரான நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி
லோக் ஆயுக்தா உறுப்பினரான நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக, 2023 முதல், இரண்டு ஆண்டுகள் ராமராஜ் பணியாற்றி வந்தார். அவர் சென்னையில் உள்ள, 'லோக் ஆயுக்தா' உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பணியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, சென்னையில், 'லோக் ஆயுக்தா' உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த கணக்கம்பட்டி கிராமத்தில், விவசாய குடும்பத்தில், 1968ல், பிறந்தவர் ராமராஜ். இவர், நீதி நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தமிழக குழந்தைகள் உரிமைகள் கமிஷனில், 13 மாதங்கள் உறுப்பினராகவும், மூன்று ஆண்டுகளாக அரியலுார், நாமக்கல் மாவட்டங்களில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த, 2023 ஏப்., முதல் தற்போது வரை, 23 மாதங்களில், 500க்கும் மேற்பட்ட நுகர்வோர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த ஓராண்டில், கோவையில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த, 128 வழக்குகளில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.