/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்னணு பரிவர்த்தனையில் இடுபொருள் வினியோகம்: வேளாண் இணை இயக்குனர்
/
மின்னணு பரிவர்த்தனையில் இடுபொருள் வினியோகம்: வேளாண் இணை இயக்குனர்
மின்னணு பரிவர்த்தனையில் இடுபொருள் வினியோகம்: வேளாண் இணை இயக்குனர்
மின்னணு பரிவர்த்தனையில் இடுபொருள் வினியோகம்: வேளாண் இணை இயக்குனர்
ADDED : செப் 09, 2024 06:51 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) பேபிகலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும், மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருள்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, துவரை, ஆமணக்கு, பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங் சல்பேட், அங்கக உரங்கள், மத்திய, மாநில திட்டங்களின் கீழ் இடுபொருள்கள் இருப்பு வைத்து மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடு பொருள்களை, ஏ.டி.எம்., கார்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம், அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., கார்டு அல்லது கூகுள் பே, போன் பே மூலம் செலுத்தி, வேளாண் இடுபொருள்களை பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.