/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளை நிலத்தை பொது ஏலம் விடுவதை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்

ADDED : டிச 31, 2024 07:27 AM
நாமக்கல்: பொத்தனுாரை சேர்ந்த விவசாயிகள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், ப.வேலுார் தாலுகா, பொத்தனுார் கிராமத்தில், 12.42 ஏக்கர் நிலம், 100 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் அனுபவத்தில் இன்று வரை இருந்து வருகிறது. மேலும், இந்த நிலத்தின் ஆவண உரிமை மற்றும் அனுபவ உரிமை இதுவரை, எங்களிடமே இருந்து வருகிறது.
கடந்த, 1967ல் இருந்து, 1997 வரை, சுத்த கிரயம் பெற்றுள்ள ஆவணங்களும் எங்களிடம் தான் உள்ளது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எங்கள் தரப்பிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றாலும், எங்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணை வழங்கவில்லை. இந்நிலையில், நாளை (இன்று), எங்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தை பொது ஏலம் விடுவதாக, ஹிந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விரோத செயலை கண்டித்தும், பொது ஏலத்தை தடுத்து நிறுத்த கோரியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், குத்தகைதாரர்கள், வீடு மனை உரிமையாளர்கள், நாளை (இன்று) முதல், கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.