/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
/
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : டிச 11, 2024 06:55 AM
நாமக்கல்: 'ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அரசு கட்டடப்பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அதன் விலையை குறைக்க வேண்டும்' என, அரசு ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட கல்குவாரி மற்றும் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலையை யூனிட் ஒன்றிற்கு, 1,000 ரூபாய் திடீரென உயர்த்தி உள்ளனர். அதனால், பில்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர், அரசு ஒப்பந்ததாரர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விலையேற்றத்தால், அரசு கட்டட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும். பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். அதனால், இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட பில்டர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் தென்னரசு கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்த்துவது குறித்து, கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தினர், எங்களிடம் கலந்தாலோசிக்காமல், 40 சதவீதம் விலையை திடீரென உயர்த்தியுள்ளனர். அதன்படி, ஒரு யூனிட்டிற்கு, 1,000 ரூபாய் உயர்த்தி, 4,000 ரூபாயாக அறிவித்துள்ளனர். திடீரென ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அரசு கட்டடங்களின் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஜல்லி, எம்.சாண்ட்களின் விலையை மார்ச் வரை உயர்த்த கூடாது. நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவரும், அனைத்து சங்கத்தினரையும் அழைத்து கூட்டம் நடத்தி விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். விலையேற்றத்தை குறைக்காவிட்டால், வேலை நிறுத்தம் செய்வது தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

