ADDED : பிப் 26, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2024-25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சியாளர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா, நாமக்கல்-சேலம் சாலை, முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நடந்தது. நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பட்டச்சான்று வழங்கினார்.
முதல்வரும், துணை பதிவாளருமான செல்வி, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சரவணன், விரிவுரையாளர் காயத்ரி, கூட்டுறவு சார் பதிவாளர் சரவணன், பயிற்சி நிலைய அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
