ADDED : ஆக 06, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:நாமக்கல்
நகரில், சேலம் மெயின் ரோட்டில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம்
செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், 2026-27ம் ஆண்டிற்கான மாணவ,
மாணவியர் சேர்க்கை நடந்துள்ளது. இதையொட்டி, பயிற்சி வகுப்பு துவக்க
விழா, நடந்தது.
பயிற்சி நிலைய முதல்வர் செல்வி முன்னிலை
வகித்தார். நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ் வகுப்புகளை துவக்கி
வைத்து பேசினார். நாமக்கல் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர்
பால்ஜோசப், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க
துணைப்பதிவாளர் அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
