/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு சங்க உதவியாளர், எழுத்தர் பணி தேர்வு வேலைவாய்ப்பு ஆபீசில் பயிற்சி வகுப்பு துவக்கம்

ADDED : ஆக 19, 2025 01:08 AM
நாமக்கல், 'கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை துவங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வு
களுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ள கூட்டுறவு சங்கங்களில் உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாளை மாலை, 4:00 மணிக்கு, பாடத்திற்கான சிறப்பு வல்லுனர்களை கொண்டு துவங்குகிறது.
இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி மூலமாகவோ, onlineclassnkl@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிபரத்தை, இன்றைக்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.