ADDED : நவ 24, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு; திருச்செங்கோடு அடுத்த வரப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள சிக்கன் சென்டரில், கடந்த, இரண்டு மாதங்களாக சிவகாசி, நாராயணபுரம் முத்துராமலிங்க நகரை சேர்ந்த மந்திரசெல்வம், 33, வேலை செய்துவருகிறார்.
கடந்த, 20ல் ஜெனரேட்டர் காப்பர் ஒயர் திருட்டு போனது. இதுகுறித்து கடை மேலாளர் ஜெகன், 32, கடையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மந்திரசெல்வமும், திருச்செங்கோட்டை சேர்ந்த ஷாருக்கான், 29, ஆகிய இருவரும், 'டியோ' ஸ்கூட்டரில் ஒயரை திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகன் அளித்த புகார்படி, திருச்செங்கோடு ரூரல் போலீசார், இருவரையும் கைது செய்து, ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
