தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சோளத்தட்டு அறுவடை தீவிரம்: உருளையாக கட்டி சேமிக்க திட்டம்

சோளத்தட்டு அறுவடை தீவிரம்: உருளையாக கட்டி சேமிக்க திட்டம்

சோளத்தட்டு அறுவடை தீவிரம்: உருளையாக கட்டி சேமிக்க திட்டம்


ADDED : ஏப் 29, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் சோளத்தட்டு அறுவடை செய்யப்பட்டு இயந்திரம் மூலம் உருளையாக கட்டி சேமித்து வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

நாமகிரிப்பேட்டை மற்றும் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி பயிராக சோளம் பயிரிட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன் பெய்த மழையை பயன்படுத்தி சோளம் விதைக்கப்பட்டது. இந்த பயிர்கள் தற்போது கோடை வெயிலில் நன்கு காய்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

சில நாட்களுக்கு முன், நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோளத்தட்டு அறுவடை பணிகள் தொடங்கின. விவசாயிகள் முதலில் சோளப்பூட்டைகளை தனியாக அறுவடை செய்து கொண்டனர். பின், எஞ்சியுள்ள சோளத்தட்டுகளை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதற்காக விளைநிலங்களிலேயே வெயிலில் காய வைத்தனர். நன்றாக காய்ந்த சோளத்தட்டுகளை சேகரித்து வைக்க அதிக இடம் தேவைப்படும் என்பதால், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திரங்கள் மூலம் உருளையாக கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிராக்டரில் இணைக்கப்பட்டுள்ள இந்த நவீன இயந்திரம், நிலத்தில் சிதறி கிடக்கும் சோளத்தட்டுகளை தானாகவே உள் இழுத்து, அழுத்தமான உருளைகளாக மாற்றி வெளியேற்றுகிறது.

ஒவ்வொரு உருளையும், 25 முதல், 30 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது. இந்த உருளைகளை கையாளுவது மற்றும் லாரிகளில் ஏற்றிச்செல்வது மிகவும் எளிது என்பதால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள சோளத்தட்டுகளை உருளையாக கட்ட, 1,500 முதல், 2,000 ரூபாய் வரை இயந்திர வாடகையாக வசூலிக்கப்படுகிறது. கோடை காலத்தீவன தட்டுப்பாட்டை போக்க சோளத்தட்டுகளை பதப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு, 100-க்கும் மேற்பட்ட உருளைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் விவசாய வேலைகள் எளிதாக முடிவடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us